வீட்டுக்குள் புகுந்த பத்தரை அடி நீள ராஜநாகம்! அதன் சத்தத்தால் அலறிய நபர்!
ஒடிஷா மாநிலத்தில் வீட்டுக்குள் புகுந்த பத்தரை அடி நீளமுள்ள ராஜநாகம் பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. நயாகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசிக்கும் ரமேஷ் பிரதான் என்பவர் தனது வீட்டில் விசித்திரமாக சத்தம் கேட்பது கண்டு ஒவ்வொரு இடமாக சோதித்தார்.
அப்போது வீட்டு கூரையில் பத்தரை அடி நீளம் கொண்ட மிகப் பெரிய ராஜ நாகம் பல்லியை விழுங்க முயன்று கொண்டிருந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த தகவலின் பேரில்உள்ளூர் பாம்பு பிடி வீரர் விரைந்து வந்து லாவகமாக ராஜநாகத்தை பிடித்தார். இதையடுத்து பையில் அதை போட்டு எடுத்து சென்று வனப்பகுதியில் விட்டார்.
பாம்புகளில் ராஜநாகம் மிகவும் கொடிய விஷத் தன்மை கொண்டதாகவும் உரிய நேரத்தில் அதைப் பார்த்ததால் கிராமவாசி ரமேஷ் உயிர்தப்பினார்.






