--- --:--:-- --

தமிழகத்தில் இன்றும், நாளையும் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்!

5.3

தமிழகத்தில் இன்றும், நாளையும் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தருமபுரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட வட மேற்கு மாவட்டங்களில் 107 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், தேனி ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது . சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக 98 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளதாகவும் ஆங்காங்கே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 9 சென்டி மீட்டரும், நாகர்கோவிலில் 8 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனிடையே லட்சத்தீவு, குமரி கடல், மன்னார் வளைகுடா, தெற்கு வங்க கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது . மாவட்டத்தின் மலையோர பகுதிகளான கோதையாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உட்பட பல்வேறு பகுதிகளிலும் நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குழித்துறை உட்பட பல்வேறு நகரப் பகுதிகளிலும் நீரோடி முதல் உள்ள கரையோரப் பகுதிகளில் மழை பெய்தது.

 

தொடர் மழையால் மாவட்டத்தின் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon