சிறுமியின் வீட்டிற்கே சென்று காதல் தொல்லை அளித்த இளைஞர்! சிறுமியின் வீட்டாராலே கொலை செய்யப்பட்ட இளைஞர்!
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பத்தாம் வகுப்பு மாணவியை காதலிக்குமாறு வீட்டிற்கே சென்று தொல்லை செய்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். சிதம்பரத்தை சேர்ந்த அன்பழகன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவியுடன் ஓராண்டுக்கு முன் பழகியுள்ளார். அவரின் நடவடிக்கைகள் பிடிக்காததால் சிறுமி அவருடன் பேசுவதை நிறுத்தினார்.
இதனால் அடிக்கடி சிறுமியை தொல்லை செய்து கொண்ட அன்பழகன் வெற்றி சிறுமியின் வீட்டிற்கே சென்று கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் குடும்பத்தினர் அன்பழகனின் கை கால்களை கட்டி போட்டு வெட்டி கொலை செய்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக தலைமறைவாக இருந்த சிறுமியின் தந்தை, தாய் மற்றும் 17 வயது மகன் ஆகியோரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாபநாசம் படம் பாணியில் நடைபெற்றுள்ள இந்த கொலை கடலூர் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






