--- --:--:-- --

‘பசுமையாக மாறும் சிவகங்கை இராணுவ வீரர்களின் முயற்சி வெற்றிபெறுமா’ !

5.5

‘வைகை பட்டாளம்’ என்ற பெயரில் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இந்திய இராணுவ வீரர்கள் பொது சேவையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் முழுதும் சுமார் 500 மரக்கன்றுகளை இன்று இலவசமாக வழங்கினர். தொடர்ந்து இது போன்ற சுற்றுச்சூழல் செயல்பாடுகளை செய்ய உள்ளதாக இராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்களிடம் கேட்ட போது…”சிவகங்கை மாவட்டம் வறட்சியான மாவட்டம் என்றாலும் வைகை தான் எங்கள் மாவட்டத்திற்கு பிரதானம். இதனால் வைகை நதியை பெருமை கொள்ளும் வகையில் அதன் பெயரை வைத்து சிவகங்கையை சேர்ந்த இராணுவ வீர்கள் வாட்சப் குழு மூலம் செயல்பட ஆரம்பித்தோம். சுமார் 200 நபர்கள் குழுவில் இணைந்து எங்களிடம் இருக்கும் பணத்தை திரட்டினோம்.

அதன் பின் ஏழை, எளிய மக்களுக்கு கொரோனா ஊரடங்கு காலத்தில் உதவி செய்தோம். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் அதிக மரங்களை உருவாக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். இதனால் முதல் கட்டமாக 500 மரக்கன்றுகளை சிவகங்கை மாவட்டம் முழுதும் காவல்நிலையம், தாலுகா அலுவலகம், பொதுமக்கள் என எல்லா இடங்களிக்கும் கொண்டு சென்றுள்ளோம் எங்களின் செயல்பாடு தொடர்ந்து வெற்றியை அளிக்கும் என்று நம்புகிறோம்” என்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon