--- --:--:-- --

சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் ராணுவ வீரர் மதியழகன் உடல்!

3

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு வந்து சேர உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் இந்தியா – பாகிஸ்தான் ராணுவத்தினர் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது.

 

இதில் சேலம் மாவட்டம் எடப்பாடி குட்பட்ட வெத்தலை காரங்காடு பகுதியை அடுத்த வெத்தலைகாரன் காடு கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார். 1999 ஆண்டு ராணுவத்தில் சேர்ந்த இவர் கடந்த 21 ஆண்டுகளாக வீரத்துடன் பணிபுரிந்து வந்துள்ளார்.

 

ராணுவ வீரர்களின் உடல் இன்று பிற்பகல் கோவை விமான நிலையம் வழியாக அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்து செல்லப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் வீரமரணம் அடைந்த சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 

மதியழகன் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக அறிக்கையில் முதல்வர் கூறியுள்ளார். தன்னலம் கருதாமல் தியாக உணர்வோடு நாட்டின் பாதுகாப்பு பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வீரமரணம் அடைந்தவர் மதியழகன் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon