--- --:--:-- --

கொரோனா பாதிப்பு பகுதி மாணவர்கள் தேர்வெழுத தனி அறை!

2

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தனியறையில் பொதுத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

 

ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகள் திறப்பது சாத்தியம் கிடையாது என்று ஆன்லைன் வகுப்புகளில் இருந்து மாணவர்களை நீக்கும் தனியார் பள்ளிகள் தொடர்பாக புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 

கொரொனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்களை வேன் மூலமாக அழைத்துச் சென்று தனியறையில் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon