--- --:--:-- --

சென்னையில் மட்டும் ஜூலையில் 1.50 லட்சம் பேர் கொரொனாவால் பாதிக்கப்படுவர் என அதிர்ச்சி தகவல்!

10.1

சென்னையில் ஜூலை மாதத்திற்குள் சுமார் ஒன்றரை லட்சம் பேருக்கு கொரொனா பரவ வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

 

தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் நிபுணர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து நடத்திய ஆய்வின் முடிவுகளை கடந்த மே மாதம் முதல் வாரத்திலேயே அரசுக்கு சமர்ப்பித்துள்ளனர்.

 

அதன்படி ஜூலை மாதம் 15ஆம் தேதிக்குள் சென்னையில் மட்டும் ஒன்றரை இலட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் 1,600 பேர் வரை உயிரிழக்கக் கூடும் என்றும் கிடைத்துள்ளது.

 

இந்த எண்ணிக்கை அக்டோபர் மாதத்தில் உச்சத்தை தொட வாய்ப்பிருப்பதாகவும் பல்கலைக்கழக ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. இந்த மாத இறுதிக்குள் தமிழகத்தின் பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை எட்டும் என்றும் உயிரிழப்பு எண்ணிக்கை 250 ஐ தாண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon