--- --:--:-- --

பாலுக்காக அழுத குழந்தைக்கு பாலை வாங்கி ரயிலை முந்தி ஓடி சென்று பாலை கொடுத்த ரயில்வே காவலருக்கு பியுஷ் கோயல் பாராட்டு!

9.1

ஓடும் ரயிலில் பயணித்த 6 மாத குழந்தைக்கு அசுர வேகத்தில் பால் வாங்கி கொடுத்த ரயில்வே காவலருக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டு தெரிவித்துள்ளார். ஹஸீன் சாஸ்மி என்பவர் தனது மனைவி மற்றும் நான்கு மாத குழந்தையுடன் மில்காமிலிருந்து கோரக்பூர் செல்லும் ரயிலில் சென்றுக் கொண்டிருந்தார்.

 

அப்போது அவரது குழந்தை பாலுக்காக அழுதுள்ளது. முந்தைய ரயில் நிலையங்களில் பால் கிடைக்காத நிலையில் போபால் ரயில் நிலையத்திலிருந்த ரயில்வே காவலர் இந்தர்சிங் என்பவரின் உதவியை நாடியிருக்கிறார். உடனடியாக விரைந்து போபால் நிலையத்திற்கு வெளியே உள்ள கடையில் இருந்து பால் வாங்கி வந்தார்.

அப்போது ரயில் நகர தொடங்கியது. ஓடும் ரயிலில் பின்னால் ஓடி சென்று உரியவரிடம் பாலை வழங்கியுள்ளார். இந்த மனிதாபிமான செயலுக்கு இந்தர்சிங் யாதவை நாடி பாராட்டி வந்த நிலையில் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பாராட்டியதோடு அவரை கவுரவிக்கும் விதமாக ரொக்க பரிசையும் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon