உலகளாவிய தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு அமைப்புக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்கும்!
உலகளாவிய தடுப்பூசி மற்றும் நோய் தடுப்பு அமைப்புக்கு இந்தியா 15 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். இந்தியா – ஆஸ்திரேலியா நாடுகளின் உச்சிமாநாடு காணொலிக் காட்சி மூலமாக நேற்று நடைபெற்றது.
இதில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கலந்துகொண்டு பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவரித்தனர். இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான உறவு ஆழமாகவும் அதேசமயம் விரிவடைந்து வருவதாகவும் கூறிய பிரதமர் மோடி இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்த இது சரியான வாய்ப்பு என்றும் கூறினார்.
கொரொனா தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள கடினமான பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளில் இருந்து விடுபட அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டி இருப்பதாக கூறி இருக்கும் மோடி இந்த நெருக்கடியில் இருந்து வெளிவர அனைத்து தளங்களிலும் விரிவான சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் கொரொனா வைரஸ், அம்பன் புயல் போன்ற பொருளாதார சவால்களை சந்தித்து வரும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா சார்பில் ஆதரவு தெரிவிப்பதாக கூறினார்.






