--- --:--:-- --

கொரொனாவிலிருந்து குணமடைந்த இளைஞருக்கு மீண்டும் ஏற்பட்ட கொரொனா தொற்று! அதிர்ச்சி!

4

சென்னையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவருக்கு மீண்டும் தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டையார்பேட்டையை சேர்ந்த 24 வயது இளைஞர் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி லேசான அறிகுறிகளுடன் ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அன்றைய தினமே தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் உடல் வலி, இலேசான காய்ச்சலுடன் சிகிச்சையில் இருந்தார். படிப்படியாக அறிகுறிகள் நீங்கி அவருக்கு மேல் இரண்டாம் தேதி மற்றும் மே 3ஆம் தேதி பரிசோதனைகளில் கொரொனா தொற்று இல்லாதது உறுதியானது. ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து 15 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு நலமுடன் வீடு திரும்பினார்.

 

இந்த நிலையில் நான்கு நாட்களுக்கு முன்னதாக அந்த இளைஞருக்கு வயிற்று வலி ஏற்பட்டதை அடுத்து புரசைவாக்கத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தார். அப்போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குடல்வால் அழற்சி நோய் இருப்பதை உறுதி செய்தனர். அத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஈசிஆர் சோதனையில் கொரொனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

 

இதனையடுத்து அவர் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இம்முறை அவருக்கு கொரொனா இருந்தாலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon