மகாராஷ்டிராவை சூறையாடிய நிசர்கா புயல்!
மகாராஷ்டிராவின் அலிபாக் நகரை சூறையாடிய நிசர்கா புயல் வலுவிழந்து தெற்கு திசையை நோக்கி நகர்ந்தது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்த நிசர்கா புயல் மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதியான அளிபக்கில் நேற்று கரையை கடந்தது.
சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக புயல் கரையை கடந்த போது ஆங்காங்கே வீடுகளின் கூரைகள் சூறாவளி காற்றில் பெயர்ந்து பரந்தன. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்ததில் வாகனங்கள் சேதமடைந்தன.மின்கம்பம் சாய்ந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகவும், சிலர் காயமடைந்ததாகவும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
நிசர்கா புயல் மும்பை அருகே சென்ற போது பலத்த காற்று வீசியதால் மும்பையிலும் தாழ்வான பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. நிசர்காபுயலால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மும்பை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது.






