--- --:--:-- --

படப்பிடிப்புகளில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு காப்பீடு..!

7

படப்பிடிப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்ய வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. முதற்கட்டமாக சின்னத்திரை தொடர்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், காப்பீடு பெறுகின்றனர். தமிழகத்தில் திரைத்துறை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளில் சுமார் 25,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

 

பொதுவாகவே இந்த படப்பிடிப்புகள் ஆபத்து நிறைந்தவை . ஒருவேளை படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டாலோ அல்லது பாதிக்கப்பட்ட தொழிலாளி இறக்க நேரிட்டாலோ அவருக்கும், அவரது குடும்பத்துக்கு எந்த உதவியும் கிடைக்காது.

 

எனவே திரைப்படங்களிலும் அல்லது சின்னத்திரை படப்பிடிப்புகளில் பணிபுரியும்போது சம்பந்தப்பட்ட குழுவினர் காப்பீடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. தற்போது முதற்கட்டமாக சின்னத்திரை தொடர்களில் பணிபுரியும் 3,000 தொழிலாளர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

ஒரு தொடரில் பணிபுரியும் தொழிலாளருக்கு காப்பீடு செய்யப்பட்டால் அந்த தொழிலாளி திரைப்படங்களிலும் வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் பணிபுரிய முடியாது. சின்னத்திரையில் காப்பீடு நடைமுறைக்கு வந்த நிலையில் திரைப்படங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இது விரிவு செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon