மத்திய பாதுகாப்புத் துறை செயலாளர் அஜய்குமாருக்கு கொரோனா தொற்று?
மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய்குமாருக்கு கொரொனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகம் அமைந்துள்ள சவுத் பிளாக் பகுதியை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தியதனுடன் அஜய்குமார் உடன் தொடர்பில் இருந்த 30 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இத் தகவல் எதையும் மத்திய அரசு உறுதி செய்யவில்லை. பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நடத்திய கூட்டங்களில் அஜய்குமாரும் பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. முப்படை தலைமை தளபதி மற்றும் முப்படை தளபதிகளின் அலுவலகங்களும் பாதுகாப்பு செயலாளர் அலுவலகத்தின் அருகே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.






