--- --:--:-- --

4 மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு!

2

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் வீட்டு மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூலை 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை தவிர மற்ற மாவட்டங்களுக்கு இம்மாதம் 15ஆம் தேதி வரை மின்வாரியம் அவகாசம் வழங்கியுள்ளது.

 

ஏற்கனவே ஜூன் 6ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசம் மார்ச் மாதம் 25ஆம் தேதி முதல் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு பொருந்தும் என்றும் உயர் மின் அழுத்த மின் கட்டண நுகர்வோர்கள் மே மாதக் கட்டணத்தை இந்த மாதத்திற்குள் செலுத்த வேண்டும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon