காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெறும்!
காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் வரும் 10 ஆம் தேதி காணொளி மூலமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் ஜல்சக்தி எனப்படும் மத்திய நீர்வளத் துறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்நிலையில் மத்திய நீர் ஒழுங்குமுறைக் குழு ஆலோசனை வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் என்றும் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் பத்தாம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பாசனத்திற்காக வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட இருக்கும் நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு 2018 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஆறாவது கூட்டம் இதுவாகும். டெல்லியில் மத்திய நீர்வள ஆணைய தலைவர் ராஜேந்திர குமார் ஜெயின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்கின்றனர்.






