இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிர வைத்த நரபலி! பாலியல் உறவில் ஈடுபட்டிருந்த போது காதலனையே நரபலி கொடுத்த காதலி!
உலக அளவில் பல மூடநம்பிக்கைகள் உள்ளன. அதில் பயங்கரமான ஒன்று தான் நரபலி. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரம்பலூர் மாவட்டத்தில் மூலிகை தோட்டம் ஒன்றில் 6 மாத குழந்தை நரபலி கொடுக்கப்பட்டது. 2017 ஜனவரியில் கும்பகோணம் அருகே 12 வயது சிறுவன் கோவில் சூலத்தால் குத்தி நரபலி கொடுக்கப்பட்டான்.
2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒடிசா மாநிலத்தில் உள்ள கிராமத்தில் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் சகோதரனும், தாய்மாமன் சேர்ந்து 9 வயது சிறுவனை நரபலி கொடுத்தனர். 2019 ஜூலை 7 ஆந்திர மாநிலம் கொட்டிகோட்டா கிராமத்தில் உள்ள இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் நரபலி கொடுக்கப் பட்டனர்.
மனித ரத்தத்தால் கடவுளுக்கு அபிஷேகம் செய்தால் புதையல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த கொடூரம் நிகழ்த்தப்பட்டது. இந்தியா மட்டுமல்ல பிற நாடுகளிலும் இதுபோன்ற கொடூரங்களுக்கு பஞ்சமில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரஷ்யாவில் ஒரு கோர நிகழ்வு நடந்தது.
தனது காதலருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு இருந்த இளம்பெண் ஒருவர் படுக்கையில் வைத்தே அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சாத்தானுக்கு படைத்ததாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் அவர். இவையாவும் நரபலிக்காக சிந்தப்பட்ட ரத்தத்தின் சிறு துளிகள் மட்டுமே.






