--- --:--:-- --

திமுக பொருளாளராகத் துரைமுருகனே நீடிப்பார் !

7

திமுக பொருளாளராக துரைமுருகனை நீடிப்பார் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கொரொனா அச்சுறுத்தும் நேரத்தில் பொதுக்குழுவை கூட்டி பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு தேர்வு செய்ய முடியாத அசாதாரண சூழ்நிலை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

இதனை கருத்தில் கொண்டு பொதுக்குழு கூடும் வரையில் துரைமுருகன் கொடுத்த பதவி விலகல் கடிதத்தின் பெயரில் தான் எடுத்த நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். திமுக பொருளாளர் பதவியில் துரைமுருகனை தொடர்ந்து நீடிப்பார் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon