ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை!
ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க முடியாத ஏமாற்றத்தைத் தாங்க முடியாமல் கேள்வி ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. கொரொனா காலகட்டத்தில் பள்ளிகளைத் திறக்க முடியாததால் கேரளாவில் நேற்று முதல் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விக்டர்ஸ் என்ற சேனல் வழியாக ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழை மாணவிக்கு தொலைக்காட்சி வழியாகவோ இன்டர்நெட் வழியாகவோ அந்த வகுப்பில் பங்கேற்க இயலாமல் போய் விட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தை அடுத்து முழுமையான அறிக்கை தருமாறு மாவட்ட கல்வி அதிகாரிக்கு கல்வி அமைச்சர் ரவீந்திரநாத் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் சுமார் இரண்டரை லட்சம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் பங்கேற்கும் வசதி இல்லை எனவும் கூறப்படுகிறது.






