--- --:--:-- --

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வழக்கு தொடரப்பட்டுள்ளது!

6.1

ஜூன் 15ஆம் தேதி முதல் நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை இரண்டு மாதங்களுக்கு தள்ளிவைக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஆசிரியர்களுடன் கலந்தாலோசிக்காமல் பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

அரசின் அறிவிப்பால் தேர்வு எழுதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாற்றும் ஆசிரியர்கள் போன்ற பணியாளர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தேர்வு நடக்கும் மையங்களில் எத்தனை சுகாதார பணியாளர்கள் நியமிக்கப்படுவர் என்பதை அரசு குறிப்பிடவில்லை எனக் கூறிய மனுதாரர் விடுதிகளில் புத்தகங்களை வைத்து விட்டு வீடு திரும்பிய மாணவர்களுக்கு தேர்வு எழுத கடினம் என்பதால் தேர்வுக்கு முன் 15 நாட்கள் பயிற்சி வகுப்புகளை நடத்த உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon