--- --:--:-- --

இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு..!

11

இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற கோரி தொடரப்பட்ட மனுவை பரிந்துரையாக எடுத்து பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆங்கிலேயர்களால் நிறுவப்பட்ட இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என டெல்லியை சேர்ந்த நபர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது.

 

ஏற்கனவே இந்தியா மற்றும் பாரத்என்ற இரு பெயர்களால் அழைக்கப்பட்டு வருவதாகவும் இதில் புதிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இருப்பினும் இந்த மனுவை சம்பந்தப்பட்ட அமைச்சகத்திடம் கோரிக்கையாக வழங்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள் கோரிக்கைகளை பரிந்துரையை ஏற்று பரிசீலிக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு அறிவுரை வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon