10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாளை முதல் ஹால் டிக்கெட் வழங்கப்படும்!
தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருக்கிறது. தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்புக்கு நடைபெற்று வந்த பொதுத் தேர்வு தடைபட்டது.
இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி பதினொன்றாம் வகுப்புக்கு நிலுவையில் இருக்கும் தேர்வும் பதினெட்டாம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடைபெற உள்ளது. இதன் இடையே வரும் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கப்பட உள்ளது.
இந்த நிலையில் நாளை முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நாளை முதல் அவரது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பெற்றுக்கொள்ளலாம் எனவும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






