--- --:--:-- --

மறைந்த கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா இன்று! சட்ட மன்ற தேர்தலை எதிர்கொள்ள போகும் திமுக!

Celebrities Pay Homage to Manorama

Celebrities Pay Homage to Manorama

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் 97 ஆவது பிறந்தநாள் விழா கொரோனா பாதிப்பு காரணமாக கட்சியினரால் இன்று எளிமையாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அவர் இல்லாத சூழலில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக எந்த அளவிற்கு தயாராக இருக்கிறது?

 

கடந்த அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை திமுக மற்றும் அதிமுக கட்சிகள் தான் மாறி மாறி ஆண்டு வருகின்றனர். இந்த நிலையில் இருபெரும் ஆளுமை களான கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் இல்லாமல் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் இரண்டு கட்சிகளும் களம் காண உள்ளன.

 

ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றிருந்தாலும் அதை பாஜகவுக்கு எதிரான வெற்றியாகவே பார்க்கப்பட்டது. இந்த நிலையில் கருணாநிதி இல்லாமல் அவரது மகனாய் திமுகவின் தலைவராய் மு க ஸ்டாலின் முதன்முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண உள்ளார்.

 

1960 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட கொள்கைகளை முழுமையாக பின்பற்ற முடியாமலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற முடியாமலும் இரண்டு திராவிட கட்சிகளும் இருப்பதாக பரவலான கருத்து உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மையமாக வைத்துதான் தேர்தல் நடக்கும் என சிலர் கூறுகின்றனர்.

 

டிஜிட்டல் யுகத்தில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியுள்ளதை உணர்ந்து இணையதளம் மூலம் திமுக தொடங்கிய ஒன்றிணைவோம் வா என்ற திட்டம் அவர்களுக்கு கைகொடுக்கும் எனவும் சிலர் தெரிவிக்கின்றனர். 2021 சட்டமன்ற தேர்தல் என்பது திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் ஆளுமைமிக்க தலைவரைத் தீர்மானிக்கும் தேர்தலாக பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon