--- --:--:-- --

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை!

10

ஜம்மு காஷ்மீர், ராஜோரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லையில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

கடந்த 28ம் தேதியிலிருந்து நசவாரா பிரிவில் உள்ள கட்டுப்பாட்டு எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி இந்திய எல்லைக்குள் மறைந்துள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

 

அப்போது பயங்கர ஆயுதங்களுடன் காணப்பட்ட 3 தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் தெரிவித்துள்ளது. கொரொனா வைரஸ் பரவல் மறைவில் ஏராளமான தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் பாகிஸ்தான் ஊடுருவ செய்து இருப்பதாகவும் அவர்களை கண்டுபிடித்து அழிக்கும் நடவடிக்கைகள் தொடரும் எனவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon