--- --:--:-- --

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது!

9

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்திற்கு என்ன பலன்? கோடை வெயில் சுட்டெரித்து நாடே தவித்துக் கொண்டிருந்த நிலையில் மனதையும், மண்ணையும் குளிர்விக்கும் விதமாக தொடங்கியுள்ளது தென்மேற்கு பருவமழை.

 

பொதுவாக மே அல்லது ஜூன் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் உள்ள மழைப்பொழிவை தென்மேற்கு பருவமழை என்று கூறுவார்கள். சிலமுறை அக்டோபர் வரைகூட மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை தான் நாட்டில் 75 சதவீத தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது.

 

இந்த ஆண்டு மழை பொழிவு சராசரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் கேரளா உள்ளிட்ட இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

 

தமிழகம் வடகிழக்கு பருவமழையை தான் அதிகமாக நம்பியுள்ளது. தென்மேற்கு பருவ மழையை பொறுத்தவரையில் தமிழகம் மழை மறைவுப் பகுதிதான் இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் தென் தமிழகம் இக்காலகட்டத்தில் மழையேப் பெய்கின்றன.

 

இதனால் தென் தமிழகத்தின் குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவையை பூர்த்தி செய்கிறது தென்மேற்கு பருவமழை. தமிழகத்திற்கு இந்த பருவ மழையினால் 32 சதவீதம் தண்ணீர் கிடைக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் விவசாயத் தேவைகள் மிகவும் பயன்தரக்கூடிய முல்லைப் பெரியாறு மற்றும் மேட்டூர் அணை ஆகியவை இதன் மூலமாகவே நிரம்புகின்றன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon