--- --:--:-- --

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு.கோவையில் திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் அவரது உதவியாளர் அதிரடி கைது !!!

17

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்துள்ள சிக்கையன்புதூர் அருகே கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிக பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரியில் இருந்து விழுந்த பாறைக்கல் ஒன்று அப்பகுதி வழியே டூவீலரில் சென்று கொண்டிருந்த ஒருவர் மீது விழுந்து படுகாயமடைந்தார்.இதுகுறித்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து லாரிகளை சிறைப்பிடித்து போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் அவ்வழியே வந்த திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் தலைமையிலான திமுக – வினர் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமி பெயரில் செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் இருந்து அதிக பாரம் ஏற்றி வரும் 500 க்கும் லாரிகளால் கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதாகவும்,இதனால் தான் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்வதாகவும்,மேலும் லாரிகளில் கள்ளத்தனமாக மதுபாட்டில்களை கேரளாவிற்கு கடத்தி செல்வதாகவும் குற்றஞ்சாட்டி காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.இச்சம்பவம் குறித்து தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்தி ஆனந்த் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நேற்று கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவரையும் அதிரடியாக கைது செய்தனர்.

 

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் கீர்த்தி ஆனந்த் இருவரும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon