டெல்லியில் லேசான நில அதிர்வு! ரிக்டரில் 4.6 ஆக பதிவு!
டெல்லி அருகே வெள்ளிக்கிழமை இரவு நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.6 ஆக பதிவாகி இருந்தது. அதே போல ஹரியானாவிலும், டெல்லியை சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நில அதிர்வின் தாக்கம் இருந்தது. இதனை உணர்ந்த மக்கள் ஏராளமானோர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்து பாதுகாப்பான இடங்களில் நின்று கொண்டனர்.
இதற்கிடையில் ஹரியானாவில் உள்ள ரோதாக்கில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்திருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 9.08 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் அந்த மையம் கூறியுள்ளது.






