எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்பு! எரித்துக் கொலையா?
மயிலாடுதுறையில் எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பூக்கடை தெருவில் உள்ள காலி இடத்தில் குப்பைகளுடன் எரிந்த நிலையில் பச்சிளம் குழந்தையின் சடலம் கிடந்தது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
உடல் முழுவதும் எரிந்து இருந்ததால் குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. குழந்தை எரித்துக்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






