--- --:--:-- --

பெண்ணை ஆபாச படம் எடுத்து மிரட்டிய அழகு நிலைய உரிமையாளர் மற்றும் மனைவி!

13

சேலத்தில் பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு கொரொனா உறுதியானதால் மூவரையும் விசாரித்த காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 

தாதகாப்பட்டி யை சேர்ந்த ஒருவர் அதே பகுதியில் அழகு நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது அழகு நிலையத்தில் பணிபுரியும் இரண்டு பெண்களை உரிமையாளர் அவரது மனைவியுடன் சேர்ந்து தங்களை மிரட்டி செல்போனில் ஆபாச புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டு தொடர்ந்து பாலியல் தொல்லை அளிப்பதாக போலீசில் புகார் அளித்தனர்.

 

அதன் பேரில் அந்த நபர் அவனுடைய நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை மகளிர் காவல் நிலைய போலீசார் கைது செய்தனர். மூவரின் செல்போன்களில் பல பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருப்பதும் தெரியவந்தது.

 

அவர்களை சிறையில் அடைப்பதற்காக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் அழகு நிலைய உரிமையாளர்களுக்கு கொரொனா இருப்பது உறுதியானது. இதனையடுத்து மூவரையும் விசாரணை செய்த மகளிர் காவல் நிலைய காவலர்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon