புதுக்கோட்டையில் கொரொனா தொற்றில் இருந்து மீண்டுள்ள ஒன்றரை வயது குழந்தை!
புதுக்கோட்டையில் கொரொனா தொற்றிலிருந்து போராடி மீண்ட ஒன்றரை வயது குழந்தைக்கு பூங்கொத்து மற்றும் பொம்மைகள் கொடுத்து ஆட்சியர் உமாமகேஸ்வரி வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். மகாராஷ்டிராவில் தங்கி பணியாற்றி வந்த தம்பதியும் அவரது ஒன்றரை வயதுக் குழந்தையும் கடந்த 18ஆம் தேதி கரம்பக்குடி அருகே சொந்த ஊரான மந்தகொல்லை கிராமத்திற்கு திரும்பினார்.
அவர்களுக்கு கொரொனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் குழந்தைக்கு மட்டும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூச்சுத்திணறலால் ஆக்ஸிஜன் செறிவூட்டல் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணம் பெற்றார்.






