--- --:--:-- --

பிளஸ்டூ தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்றுடன் தொடக்கம்..!

1

தமிழகத்தில் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும்பணி தொடங்கியது. 67 மையங்கள் அமைக்கப்பட இருந்த நிலையில் தனிமனித இடைவெளியை கடை பிடிப்பதற்காக 202 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று 5 ஆயிரத்து 373 தலைமை மதிப்பீட்டாளர்களும் 5,373 கூர்நோக்காளர்களும் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

ஒரு அறையில் 8 பேர் மட்டும் விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர். மதிப்பீட்டு மையத்திற்குள் ஒன்று கூடுதல், எச்சில் துப்புதல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரொனா பரவல் அதிகமுள்ள சென்னையில் மதிப்பீட்டு மையங்கள் அமைக்கப்பட வில்லை.

 

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு மதிப்பீட்டுப் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சிறப்பு பேருந்து வசதிகள் மாவட்ட நிர்வாகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜூன் மாத இறுதியில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மார்ச் 31ஆம் தேதி தொடங்கி இருந்த விடைத்தாள் திருத்தும் பணிகள் பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon