--- --:--:-- --

தந்தையை சைக்கிளின் மூலம் 1,200 கி.மீ ஒட்டி சொந்த ஊர் சென்றடைந்த சிறுமியை பாராட்டிய இவாங்கா டிரம்ப்!

5.1

பீகாரில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் சிறுமியை அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவான்கா மனம் திறந்து பாராட்டியுள்ளார். அமெரிக்க அதிபரின் மகளே பாராட்டும் அளவுக்கு சின்னஞ்சிறு ஊரில் வசிக்கும் சிறுமி செய்த செயல் என்ன? கொரொனா பொது முடக்கம் புலம்பெயர் தொழிலாளர்களை பரிதவிக்க வைத்துள்ளது.

 

பலரும் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்து ஊர் திரும்பும் செய்திகள் பதைபதைக்க வைக்கும் நிலையில் ஒரு சிறுமி தன் தந்தைக்கு உதவுவதற்காக காட்டி அசாத்திய தைரியம் அமெரிக்கா வரை பரவி விட்டது. டெல்லி அருகே குர்கானில் ஆட்டோ ஓட்டி பிழைத்து வந்தார் மோகன் பஸ்வான். காலில் அடிபட்ட நிலையில் அவருக்கு உதவுவதற்காக சொந்த ஊரில் இருந்து வந்தார் அவரது 15 வயது மகள் ஜோதிகுமாரி.

 

இந்த நிலையில்தான் பேரிடியாக வந்தது ஒரு பொதுமுடக்கம். காலிலும் காயம், கையில் உள்ள பணம் கரைகிறது வயிற்றில் பசி என நாட்கள் கழிய தந்தைக்கும் மகளுக்கும் ஊர் திரும்ப வேண்டும் என்ற உத்வேகம் பீறிட்டது.

அப்போது தான் தைரியமான முடிவை எடுத்தால் சிறுமி. தனது தந்தையை சைக்கிளில் பின்னால் அமர வைத்துக் கொண்டு 1,200 கிலோ மீட்டர் தூரத்திற்கு சைக்கிளை மிதிக்க தொடங்கினால் ஜோதி குமாரி மே 10ஆம் தேதி தொடங்கிய கடினமான பயணம் மே 16ஆம் தேதி முடிவுக்கு வந்துள்ளது.

 

தந்தையை பத்திரமாக ஊருக்கு கொண்டு சேர்ந்துவிட்ட சிறுமியின் செய்தி நாடெங்கும் பரவிய நிலையில்
அந்த சிறுமியின் திறமையை சோதித்து அவருக்கு தேசிய சைக்கிள் கூட்டமைப்பு உலகத்தரம் வாய்ந்த பயிற்சியை தர முன்வந்துள்ளது.

 

இந்த நிலையில் சிறுமியின் செயலைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா. சிறுமியின் பாசம் நிறைந்த மனமும் வலிமை நிறைந்த பாதங்களும் இந்தியர்களை ஈர்த்துள்ளது என கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon