--- --:--:-- --

பெண்களுக்கு எதிரான வன்முறை மீது குவியும் புகார்கள்..!

7

தமிழகத்தில் பொது முடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 5 ஆயிரத்து 740 புகார்கள் அளிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. கொரொனா பரவலை தடுக்க பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட பிறகு வீட்டில் உள்ள பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்தது.

 

வீட்டில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வெளியே செல்லாததால் கணவன் ,மனைவி இடையே ஏற்பட்ட சண்டைகளில் இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டன. பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தனிப்படை அமைக்கப்பட்டு புகார்கள் மீது விசாரணைகள் துரிதமாக நடைபெற்றன.

 

இந்நிலையில் பொதுமுடக்க காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்பாக 5 ஆயிரத்து 740 புகார்கள் அளிக்கப்பட்டதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். இதே புதுக்கோட்டையில் அதிகபட்சமாக ஆயிரத்து 424 புகார்கள் அளிக்கப்பட்டன.

 

சென்னையில் 45 புகார்கள் தெரிவிக்கப்பட்டதாக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கட்ட பொது முடக்கத்தின் போது ஆயிரத்து 427 புகார்களும், இரண்டாம் கட்ட பொது ஊடகத்தில் 2,852 புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன மூன்றாம் முடக்கத்தில் ஆயிரத்து 461 புகார்கள் கிடைத்துள்ளன.

 

இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 38 நபர்கள் கைது செய்யப்பட்டனர். கொரொனா பெருந்தொற்று காலத்திலும் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள் மாதர்களுக்கான சமநீதி மறுக்கப்படுவதை மீண்டும் தெரிவிப்பதாக உள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon