காதல் நாடகமாடி ஆபாச படம் எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த காதலன்!

பிளஸ் 1 படிக்கும் மாணவியை காதலிப்பதாக நாடகமாடி அவரது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்கியது எப்படி? 19 வயதான கிஷாந்த் தனது காதலியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததால் தற்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

 

கிஷாந்த் சிக்கியது எப்படி? திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் கிஷாந்த் . ஓராண்டுக்கு முன்னர் தனித்தேர்வராக பிளஸ் டூ வகுப்பு தேர்வு எழுத ஒரு பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

நாளடைவில் காதலிப்பது போல நடித்து உள்ளார் கிஷாந்த். காதலர்களாக மாறிய பின்னர் மாணவிவியின் செல்போனை பார்த்துள்ளார் கிஷாந்த். அதில் மாணவியின் அந்தரங்கமாக எடுத்த படங்கள் இருந்தது. அவர் தனது போனுக்கு அனுப்பும்படி கேட்டுள்ளார். கிஷாந்த் காதலன் தானே, தான் நாளை திருமணம் செய்து கொள்பவன் தானே என்ற நம்பிக்கையில் படங்களை அனுப்பியுள்ளார் மாணவி. இதையடுத்து தான் கிஷாந்த் தனது கோரமுகத்தை காட்டியுள்ளார்.

 

மாணவியின் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. ஒருகட்டத்தில் கிஷாந்த் பின்பக்கம் வேறுவிதமாக செயல்பட தொடங்கியுள்ளது. காதலியின் சகோதரி மற்றும் தோழி குளிக்கும் போது அதை வீடியோ எடுத்து அனுப்பும் படி மாணவியை மிரட்டி உள்ளார்.

 

அந்த வீடியோக்கள் கிடைத்தால் அவற்றை வைத்து அந்தப் பெண்களையும் அனுபவிக்கலாம் என்பதே கிஷாந்த் திட்டம். இதனை உணர்ந்து கொண்ட மாணவி சில நாட்களுக்கு சாந்துடன் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். மீண்டும் அவரது அந்தரங்க படங்களை வெளியிட்டு விடுவதாக மிரட்டி தொடங்கியதும் மாணவி தனது செல்போனை அணைத்து வைத்து விட்டார்.

 

ஆத்திரமடைந்த கிஷாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டிற்கு சென்று வெளியில் காத்திருப்பதாகவும் வெளியே வரும் படியும் தகவல் அனுப்பினார். மாணவி வெளியே வந்ததும் அவரை சரமாரியாக அடித்து உள்ளார். சத்தம் கேட்டு வெளியே வந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்களை கண்டதும் கிஷாந்த் தப்பியோடிவிட்டார்.

 

நடந்த சம்பவங்கள் அனைத்தையும் மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர் திருச்சி கே கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இதையடுத்து போலீசார் கிஷாந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

 

மாணவியர் தாங்கள் பழகும் நபர்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டாலும் கூட அந்தரங்க படங்களை பகிர்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட வேண்டும் என்றும் பெற்றோரும் தங்களது மகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்றும் போலீசார் பல முறை அறிவுறுத்தி வருகின்றனர். கண்காணிப்பும் விழிப்புணர்வும் இருந்தாலே இதுபோன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.


Leave a Reply