--- --:--:-- --

தனது உரிமையாளரை காக்க தலை சிதறி உயிரிழந்த நாய்!

12

மதுரை அருகே சகோதரனை மது குடிக்க அழைத்து செல்வதை தட்டிக்கேட்ட பெண்ணின் வீட்டின் மீது வீசப்பட்ட நாட்டு வெடிகுண்டை கவ்விச் சென்ற நாய் குண்டு வெடித்து சிதறி உயிரிழந்தது.

 

பாலமேடு, ராமகவுண்டன் பட்டியை சேர்ந்த செல்வராணி தனது தம்பியை மது அருந்த அழைத்து செல்வதாக கூறி சின்னத்துரை என்பவரை வசை பாடி உள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சின்னத்துரை தான் வீட்டில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வந்து செல்வராணியின் வீட்டின் மீது வீசியுள்ளார்.

 

வீசிய 4 குண்டுகளில் ஒன்று வெடித்த நிலையில் வெடிக்காமல் கிடந்த ஒன்றை செல்வராணி வளர்த்துவரும் நாய் கவ்வி கொண்டு ஓடியுள்ளது. அப்போது குண்டு திடீரென வெடித்ததில் நாய் தலை சிதறி விழுந்தது. இதுதொடர்பாக சின்னத்thuraiயை கைது செய்த போலீசார் தப்பியோடிய செல்வராணியின் தம்பியை தேடி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon