--- --:--:-- --

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானது.!

3

பாகிஸ்தானில் 90 பேருடன் சென்ற விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. லாகூரில் இருந்து கராச்சி நோக்கி சென்ற விமானம் கராச்சி விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு முன்பாக குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது.

 

விபத்துக்குள்ளான விமானம் ஏர்பஸ் 320 ரகத்தை சேர்ந்தது எனத் தெரியவந்துள்ளது. விமானம் விழுந்த இடத்தில் பாகிஸ்தான் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தில் பயணம் செய்த 90 பேரின் நிலை பற்றிய தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon