ரமலான் பெருநாளன்று தொழுகையை பள்ளிவாசலில் நடத்த அனுமதி மறுப்பு !

ரமலான் தொழுகையை பள்ளிவாசல்களில் நடத்த அனுமதி இல்லை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்திருக்கிறது. ரமலான் பெருநாளை முன்னிட்டு மே 25 ஆம் தேதி மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் இரண்டு மணி நேரம் தொழுகை நடத்த அனுமதிக்க கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

 

மதுரையை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் மே 25 ஆம் தேதி திங்கட்கிழமை இஸ்லாமியர்கள் நோன்பு நிறைவு நாளான ரமலான் பெருநாளை ஒட்டி தொழுகை நடத்த வேண்டியிருப்பதாகவும் இதற்காக மதுரையில் உள்ள பள்ளிவாசல்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரை இரண்டு மணி நேரம் ரமலான் பெருநாள் தொழுகைக்கு அனுமதி தர உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

 

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி அமர்வு இது குறித்து முடிவு மத்திய, மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் கொரொனா பரவி வரும் காலத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Leave a Reply