--- --:--:-- --

திமுக – வில் இருந்து வி.பி. துரைசாமி அதிரடி நீக்கமும்,அவரது விளக்கமும் !!!

13

திமுக துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் வி.பி. துரைசாமி நீக்கப்படுவதாகவும்,அவருக்கு பதில் அந்தியூர் செல்வராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் திமுக தலைமை அறிவித்துள்ளது.அண்மையில் பாஜக தலைவர் முருகனை வி.பி. துரைசாமி சந்தித்திருந்தார்.ஊடகங்களிலும் கூட அவர் பாஜக – வில் இணைய உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் வி.பி.துரைசாமி திமுக – வில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திமுக – வில் இருந்து நீக்கப்பட்டிருப்பது குறித்து விளக்கம் தெரிவித்துள்ளார் வி.பி.துரைசாமி.
அதில் பாஜக தலைவர் முருகனுடனான சந்திப்பு பற்றி திமுக தலைமைக்கு விளக்கம் கொடுப்பேன்.நான் அளிக்கும் விளக்கத்தை ஏற்பதும்; ஏற்காததும் தலைமையின் முடிவு என தெரிவித்துள்ளார்.

மேலும ,திமுகவில் நான் ஒரு சாதாரண தொண்டன்; தலைமைக்கு எதிராக என்னால் எதுவும் செய்ய முடியாது.ஒரு வேளை என் மீது நடவடிக்கை எடுத்தால் அதை நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் எனவும் திமுக துணைப் பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி விளக்கமளித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon