உலகம் முழுவதும் கொரோனாவைப் பரப்பியதாக சீனா மீது டிரம்ப் சாடல்!
உலகம் முழுவதும் கொரொனா வைரஸ் பரப்பியதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான படுகொலைகளை நிகழ்த்தி இருப்பதாக சீனா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்துள்ளது என கூறினார் . அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 92,000 ஆகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் தனது அமைச்சர்களுடன் கொரொனாவை எதிர்ப்பது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார்.
சீனா மீது தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வரும் அமெரிக்கா மேலும் ஒரு தாக்குதலைத் தொடுத்தார். கொரொனா பரவலை கட்டுப்படுத்த முடியாத சீனாவின் மெத்தனத்தால் உலகம் முழுவதும் பெரும் படுகொலைகள் நிகழ்த்தப்பட்டன என ஆவேசத்துடன் சாடினார்.






