--- --:--:-- --

வருவாய் ஆய்வாளர் உயிரிழப்பு! திட்டமிட்ட சதியா?

8

திருச்சி மாவட்டம் முசிறி அருகே நிவாரண பொருட்கள் வழங்குவதை ஆய்வு செய்து விட்டு வீடு திரும்பிய வருவாய் ஆய்வாளர் சாலை விபத்தில் பலியானார். முசிறியை சேர்ந்த சேகர் தொட்டியம் தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.

 

நேற்று முன்தினம் இப்பகுதியில் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதை ஆய்வு செய்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தொட்டியம் திரும்பினார். சாலையில் வந்தபோது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி நிற்காமல் சென்றது.

 

படுகாயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது உண்மையான சாலை விபத்து அல்லது மணல் கடத்தல் கும்பலுடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வருவாய் ஆய்வாளர் கொலை செய்யப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon