கொரோனாவிலிருந்து தப்பிக்க புதிய தலைக்கவசம்!
கொரொனா வைரஸ் நம்மைத் தாக்காத வகையில் புதிய தலை கவசத்தை கனடா நாட்டை சேர்ந்த ஒருவர் வடிவமைத்துள்ளார். இந்த ஹெல்மெட்டில் வெளிகாற்றை சுத்தப்படுத்தி உள்ளே அனுப்பவும் காற்றை வெளியேற்றவும் சிறிய மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நமது கண்கள், மூக்கு, வாய் போன்ற உறுப்புகளை நாமே தொட முடியாத வகையிலும் இந்த ஹெல்மெட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பயோ வைசர் 1. 0 என பெயரிடப்பட்டுள்ள இந்த கவசம் பொது விற்பனைக்கு வரும்போது இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்கும். கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுக்கு இந்த ஹெல்மெட்டை உதவிகரமாக இருக்கும் என நம்பப்படுகிறது.






