--- --:--:-- --

இலவச மின்சார திட்டம் ரத்து ! மத்திய அரசுக்கு திமுக கண்டனம்!

12.1

கொரொனா கடன் வாங்குவதற்காக இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் நிபந்தனையை தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் ஒப்புக் கொள்ளக் கூடாது என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

 

21 லட்சம் விவசாயிகள் பயன்பெறும் இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்ய தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மத்திய அரசுக்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

கொரொனா பேரிடரை முன்னிட்டு மாநில அரசுகள் அதிக கடன் வாங்கிக் கொள்ளலாம் என்று அனுமதி அளித்த கையோடு அந்த கடனை பெற வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்ய வேண்டும் என்று நிபந்தனை விதிப்பது மத்திய, மாநில அரசுகளுக்கு பொருத்தமானது அல்ல என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

 

.இலவச மின்சாரத் திட்டத்தை ரத்து செய்யும் நோக்கில் 2020 ஆம் ஆண்டு புதிய மின்சார திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்து ஊரடங்கு நேரத்திலும் அதன்மீது மாநிலங்களிடம் கருத்து கேட்டிருக்கும் மத்திய அரசு, அச்சட்டத்தை நிறைவேற்றுவதற்கு முன்பே மின்சார மானியங்களைப் பறித்துக்கொள்ளும் குறுக்கு வழிகளை கடைபிடிப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.

 

மாநில அரசுகளுக்கு கொரொனா கடன் வாங்குவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் நிபந்தனைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மட்டும் எழுதிவிட்டு நிறுத்திக்கொள்ளாமல் அதற்குரிய அழுத்தமும் கொடுத்து இலவச மின்சாரத் திட்டத்தை பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்வதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon