சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் இதய வால்வில் ஏற்பட்ட அடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தது உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த ஒன்றாம் தேதி மருத்துவ கல்லூரி மாணவியர் விடுதியில் மாணவி பிரதீபா என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், கொரொனா தொற்று இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்த நிலையில் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையை தடவியல் துறை மருத்துவர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதய வால்வில் அடைப்பு ஏற்பட்டு மாணவி உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. போலீஸ் விசாரணை நடைபெற்று வருவதால் அறிக்கையில் உள்ள விவரங்களை கூற முடியாது என்றும் இயற்கை மரணம் என்பதை மட்டும் உறுதிப்படுத்த முடியும் என்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.