53-வது பிறந்த நாளை கொண்டாடிய நடிகை மாதுரி தீட்சித்!வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
ஹிந்தி நடிகை மாதுரி தீக்ஷித் 53 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தான் பாடி வரும் இசை ஆல்பத்தின் முன்னோட்டத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். கொரொனா தாக்கத்தால் பலரும் மனதளவில் பாதிக்கப் பட்டுள்ளதால் அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக கேண்டில் என்ற தலைப்பில் ஒரு பாடலை பாடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதுள்ள சூழலில் தன்னம்பிக்கையுடன் இருப்பது மிகவும் அவசியம் என வலியுறுத்தியுள்ளார். பாடலின் முன்னோட்டம் வெளியிடப்பட்ட சில மணி நேரத்தில் லட்சக்கணக்கானோர் கண்டுகளித்துள்ளனர்.






