உணவைத் தேடி கோவிலுக்குள் நுழைந்த கரடி!

நீலகிரி மாவட்டம் உதகை அருகே உணவைத் தேடி கோவிலுக்குள் நுழைந்த கரடியை பிடிக்கும்படி வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கீழ் கைகாட்டி, தேவர்சோலை, காத்தாடிமட்டம் போன்ற பகுதிகளில் கரடிகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது.

 

இந்நிலையில் நேற்றிரவு காத்தாடிமட்டம் கிராமத்திற்குள் நுழைந்த கரடி ஒன்று உணவைத்தேடி சாலையில் சாவகாசமாக நடந்து சென்றது. பின்னர் சாலையோரத்தில் உள்ள கோவிலை கதவை கைகளால் திறந்து அந்த கரடி சர்வசாதாரணமாக உள்ளே நுழைந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியே வந்த கருதி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது.


Leave a Reply