கொரோனா வைரஸ் மனிதர்களை விட்டுப் போகாது!

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரொனா வைரஸ் மனிதர்களை விட்டு போகாது என உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் அவசர காலத் திட்டங்களின் இயக்குனர் மருத்துவர் மைக்கேல் ரேயான் ஜெனிவாவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

 

அப்போது மனித சமூகத்தில் புதிதாக நுழைந்துள்ள வைரஸ் எப்போது ஒழியும் உலகத்தை விட்டுச் செல்லும் என்பதை கவனிப்பது கடினமாக உள்ளதாக கவலை தெரிவித்தார்.

 

மனித இனத்தை விட்டு விரைவில் செல்லாது எனவும் காலப்போக்கில் மற்றொரு பெருந் தொற்றாக மாறும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார். அதனால் அனைத்து நாடுகளும் அரசு அளிக்கும் முயற்சியில் நம்பிக்கையுடன் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.


Leave a Reply