கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக அதிகரிப்பு!
தமிழகத்தில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 363 ஆக உள்ளது.
கரூர் மாவட்டத்தில் இரண்டு பேருக்கும் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் 15 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் மதுரை மாவட்டத்தில் தலா 9 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா 8 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 16 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 5 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. திண்டுக்கல், கரூர் ராமநாதபுரம், தென்காசி, தேனி, சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மட்டும் தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 423 ஆக உள்ளது. அது ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674 ஆக உள்ளது.






