முகநூல் மூலம் பெண் மருத்துவரை ஆபாச படம் எடுத்து மிரட்டி பணம் பறித்த காசிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முகநூல் மூலம் பல பெண்களிடம் பழகி காதலிப்பதாக கூறி அவர்களுடன் தனிமையில் இருந்துள்ளான் காசி. அப்போது எடுத்த புகைப்படங்களை வைத்து மிரட்டி பணம் பறித்த காசி மீது சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் புகார் அளித்தார்.
இதையடுத்து அவர் மீது பல இளம் பெண்கள் புகார் கொடுத்தனர். இதனால் நாகர்கோவில் காசியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டான். இந்த நிலையில் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்த காசிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக கூடாது என நாகர்கோவில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.