தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கி..! கடத்தல் கும்பல் சிக்கியது..!
மெக்சிகோவில் கைது செய்யப்பட்டபோதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவனிடமிருந்து தங்கத்தால் செய்யப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றியுள்ளனர். மத்திய மெக்ஸிகோவில் பிக்கோடொனாஸ் எனும் கடத்தல் கும்பல் தலைவராக எல் யூரி என்பவர் இருந்து வந்தார். எல் யூரியை பல ஆண்டுகளாக போலீசார் தேடி வந்த நிலையில் குறிப்பிட்ட இடத்தில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து எல் யூரியை போலீசார் கைது செய்தனர்.
அப்போது அவர் தங்கத்தால் செய்து பதுக்கி வைத்திருந்த ஏஆர் 50 ரக துப்பாக்கியையும், தோட்டாகளையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று கடந்த ஆண்டு பெண் தாதாவான மரிய லோபஸ் என்பவரிடம் தங்கத்தால் செய்யப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.






