--- --:--:-- --

கள்ளக்காதலிக்கு விஷ மாத்திரிகளை கொடுத்த காதலன்!

10

திருப்பூரில் கள்ளக்காதலி தன்னை திருமணம் செய்ய மறுத்ததால் அவருக்கு விஷம் கலந்த மாத்திரை கொடுத்து அந்த இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளான். திருப்பூரில் கள்ளக்காதல் சண்டையில் கொலை அரங்கேறியுள்ளது.

 

திருப்பூர் வேப்பங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ், சங்கீதா யுவராஜின் லேத் பட்டறை அருகே அதே ஊரை சேர்ந்த 28 வயதான விவேக் என்ற இளைஞர் அழகு நிலையம் மற்றும் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார். விவேக்கிற்கும், சங்கீதாவிற்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டதை அடுத்து இரு குடும்பத்தினரும் அதை கண்டித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கணவரை விட்டு பிரிந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விவேக் சங்கீதாவிடம் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சங்கீதா அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார். இந்த நிலையில் சனிக்கிழமை இரவு 10 மணிக்கு சங்கீதா வீட்டிற்கு சென்றுள்ளார் .விவேக் அங்கிருந்த கணவரை சரமாரியாக தாக்கியதில் அவர் மயங்கி விழுந்தார்.

 

சங்கீதாவின் குழந்தைகளை வெளியே தள்ளிவிட்டு கதவை தாழிட்டு உள்ளார். தான் கொண்டு வந்திருந்த விஷ மாத்திரைகளை விழுங்குமாறு சங்கீதாவை வற்புறுத்தி அவரது வாயில் திணித்து உள்ளார். தானும் சில மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் சங்கீதா மூக்கில் ரத்தம் வழிய மயங்கி விழுந்தார். விவேக்கும் மயங்கி விழுந்தார்.

 

மயக்கம் தெளிந்து எழுந்த யுவராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சங்கீதா . விவேக் மேல்சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon