--- --:--:-- --

மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்! சீனாவுக்கு கடும் எச்சரிக்கை!

13

சீனாவுடன் மீண்டும் வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் துவக்க தமக்கு விருப்பம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே நடந்த வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை சரிசெய்யும் வகையில் இரு நாடுகளும் கடந்த ஜனவரியில் ஒப்பந்தம் போட்டனர்.

 

ஆனால் கொரொனா தாக்குதலை காரணம் காட்டி அதில் மாற்றங்கள் செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

 

ஜனவரியில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தத்தின் படி இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவிடம் இருந்து கூடுதலாக 200 பில்லியன் டாலர் அளவுக்கு இறக்குமதி செய்ய வேண்டும். மீறினால் மோசமான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க நிதித்துறை அமைச்சர் ஸ்டீவன் ஒரு வாரத்திற்கு முன் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon